×

இளைஞர் தின மினி மாரத்தான்

 

ஈரோடு, செப். 2: சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் நேற்று தொடங்கி வைத்தார். சர்வதேச இளைஞர் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நேற்று நடத்தப்பட்டது. இப்போட்டியை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் ஈரோடு, எழுமாத்தூர், கோபி, நம்பியூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி, நந்தா கல்வி நிலையங்கள், வாசவி கல்லூரி, வேளாளர் மகளிர் கல்லூரி மற்றும் கொங்கு கலை, அறிவியல் கல்லூரி என 15 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 269 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி சுமார் 4.5. கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஈரோடு திண்டல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்பி ஜவஹர், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) டாக்டர் அம்பிகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழந்தைராஜன், மாவட்ட திட்ட மேலாளர் துரைசாமி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post இளைஞர் தின மினி மாரத்தான் appeared first on Dinakaran.

Tags : Youth Day Mini Marathon ,International Youth Day ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...